ஜெய்பூர்:
‘‘முஸ்லிம் சமுதாயத்தில் விவகாரத்து வழக்குகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது’’ என்று அகில இந்திய முஸ்லிம் தனிசட்ட வாரிய தலைவர் அஸ்மா ஜோஹ்ரா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் முஸ்லிம் பெண்களின் உரிமைகளும் சவால்களும் என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடக்கிறது. முதல் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய மகளிர் பிரிவு தலைவர் அஸ்மா ஜோஹ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘‘ இதர சமுதாயத்தோடு ஒப்பிடுகையில் முஸ்லிம்களின் விவகாரத்து சதவீதம் குறைவாக உள்ளது. முத்தலாக் முறை தவறாக சித்தரிக்கப்படுகிறது. இஸ்லாமில் பெண்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். இதனால் முஸ்லிம் பெண்கள் விவகாரத்து செய்வது குறைந்துள்ளது’’ என்றார்.
அவர் மேலும் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் முஸ்லிம்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலான புள்ளி விபரங்கள் இதை உறுதிபடுத்துகின்றன. முத்தலாக் முறையால் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக விவாதங்கள் எழுந்துள்ளது. எனினும் இந்த பிரச்னை தற்போது உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. இதை சட்டப்படி சந்திப்போம்.
கடந்த ஆண்டு மே மாதம் இந்த புள்ளி விபரங்கம் சேகரிக்கும் பணி தொடங்கியது. கடந்த 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான புள்ளி விபரங்கள் முஸ்லிம்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் உள்ள 16 குடும்ப நீதிமன்றங்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டது’’ என்றார்.
தொடர்ந்து அஸ்மா ஜோஹ்ரா கூறுகையில், ‘‘இதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்தில் விவகாரத்து குறை ந்திருப்பது தெரியவந்துள்ளது. முஸ்லிம் ஷரியத் நீதிமன்றங்களில் 2 முதல் 3 சதவீத வழக்குகள் மட்டுமே விவகாரத்து தொடர்பானது. இவற்றில் பெரும்பாலும் முஸ்லிம் பெண்கள் தொடர்ந்த வழக்குகளாகும்.
பெண்களுக்கான ஷரியத் கமிட்டி ஒத்துழைப்புடன் முஸ்லிம் மகிளா ஆராய்ச்சி கேந்திரா தயாரித்த அறி க்கையில், ‘‘முஸ்லிம்கள் ஆயிரத்து 307 பேரும், இந்துக்கள் 16 ஆயிரத்து 505 பேரும், கிறிஸ்தவர்கள் 4 ஆயிரத்து 827 பேரும், சீக்கியர்கள் 8 பேரும் விவகாரத்து பெற்றுள்ளனனர். கேரளா மாநிலம் கண்ணூர், எர்ணாகுளம், பாலக்காடு, மகாராஷ்டிராவில் நாசிக், தெலங்கானாவில் கரீம் நகர், ஆந்திராவில் செ க்கந்திராபாத் ஆகிய 8 மாவட்டங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது’’ என்றார்.
அவர் மேலும் கூறுகையில், ‘‘முத்தலாக் முறை கடந்த சில ஆண்டுகளாக விமர்சனத்திற்கும் உள்ளாக்கி அரசியலாக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமில் பெண்களுக்கு குறிப்பிட்ட சுதந்திரம் வழங்கப்ப்டது, சமுதாயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள். இது தவிர பெண்களுக்கு நாடு முழுவதும் பல பிரச்னைகள் கொழுந்து விட்டு எரிகிறது.
குறிப்பாக வரதட்சனை, வீடுகளில் வன்முறை, குழந்தை திருமணம், சிசு கொலை போன்ற பிரச்னைகள் உள்ளது. அதனால் முஸ்லிம் சமுதாயத்தை குறிவைத்து தாக்குவதை விட்டுவிட்டு இப்பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். பணிபுரியும் இடங்களில் முஸ்லிம் பெண்களுக்கு முதலில் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்’’ என்றார்.
முன்னதாக முத்தலாக் முறைக்கு எதிராக மத்திய உச்சநீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளது. இது பாலின சம உரிமை மற்றும் மதசார்பின்னை என தெரிவித்துள்ளது. இந்த பிரச்னை நீதிதுறைக்கு வெளியில் தீர்வு காண வேண்டும். முஸ்லிம் சட்டம் புனித நூலான குரானை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. அதனால் அதை அரசியலமைப்பு பரிசோதனை செய்யக்கூடாது என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.