திருச்சி

சிகலாவின் சகோதரர் திவாகரன் நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்கொலைக்கு சமமானது என விமர்சித்துள்ளார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.   அத்துடன் பல அரசியல் தலைவர்களையும் சந்தித்து ஆசி பெற்று வருகிறார்.   கமலஹாசன் ஏற்கனவே ட்விட்டர் மூலம் பல அரசியல் கருத்துக்களை பதிந்து வருகிறார்.   இவர் சமீபத்தில் ஆர் கே நகர் இடைத் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றதற்கு கடும் கண்டனத்துடன் தன் கருத்தை பதிந்திருந்தார்.

இந்நிலையில் தினகரனின் உறவினரும்,  சசிகலாவின்  சகோதரருமான திவாகரன் திருச்சியில் செய்தியாளர்களுடன் உரையாடி உள்ளனர்.  “தினகரன் தற்காலிகமாக அரசியல் இயக்கம் தொடங்க சாத்தியம் உள்ளது.   நாங்கள் செய்வதும் ஆன்மீக அரசியல் தான்.   தமிழ்நாட்டுக்கு ஆன்மீக அரசியல் ஏற்புடையது தான்.

அரசியலுக்கு நடிகர்கள் வருவது என்பது தற்கொலைக்கு சமமான ஒன்று.   அதே போல கமலஹாசனுடைய ட்விட்டர் பதிவுகள் அவர் தலைமைக்கு தகுதியற்றவர் என்பதை காட்டுகிறது.   ஜெயலலிதா தர்போது இல்லை என்பதினால்  ரஜினிகாந்த்,  கமலஹாசன் இருவரும் இஷ்டத்துக்கு பேசுகின்றனர்.”  என கூறி உள்ளார்.