அத்தி மரங்கள் சகுனத்தடை ஏற்படுத்துபவை என்பதால் அவற்றை வெட்டி அழிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் ஆதியநாத் உத்தரவிட்டுள்ளார் உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு வருடமும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை என்ற புனித யாத்திரை சிவ பக்தர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்த வருட யாத்திரைக்கான முன்னேற்பாடுகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்த யாத்திரையின்போது பின்பற்றப்பட வேண்டிய முறைகள் குறித்து முதல்வர் ஆதித்யநாத் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், கன்வார் புனித யாத்திரை மேற்கொள்ளப்படும் வழியெங்கும் அதிகளவில் காணப்படும் அத்தி மரங்களை வெட்ட வேண்டும் என்று உத்தவிட்டுள்ளார்.
’விரதம் இருந்து புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் செல்லும் வழியில் அத்தி மரங்கள் இருப்பது அபசகுணம்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உ.பி. முதல்வரின் இந்த உத்தரவுக்கு சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சமூகவலைதளங்களிலும் இந்த உத்தரவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.