சென்னை
தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2487 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,34,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 11,154 பேர் உயிர் இழந்து 7,04,031 பேர் குணம் அடைந்து தற்போது 19,154 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 657 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
அடுத்ததாக கோவையில் 220 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் 2,02,495 பேர் பாதிக்கப்பட்டு 3,682 பேர் உயிர் இழந்து 1,92,631 பேர் குணம் அடைந்து தற்போது 6182 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 44,296 பேர் பாதிக்கப்பட்டு 685 பேர் உயிர் இழந்து 42,597 பேர் குணம் அடைந்து தற்போது 1014 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 44,209 பேர் பாதிக்கப்பட்டு 568 பேர் உயிர் இழந்து 42,601 பேர் குணம் அடைந்து தற்போது 1,040 பேர் சிகிச்சையில் உள்ளனர்.