சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2348 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,35,777 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 11,272 பேர் உயிர் இழந்து 7,06,444 பேர் குணம் அடைந்து தற்போது 19,061 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை சென்னையில் 2,03,085 பேர் பாதிக்கப்பட்டு 3,693 பேர் உயிர் இழந்து 1,93,312 பேர் குணம் அடைந்து தற்போது 6,080 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 44,416 பேர் பாதிக்கப்பட்டு 688 பேர் உயிர் இழந்து 42,676 பேர் குணம் அடைந்து தற்போது 1052 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 44,449 பேர் பாதிக்கப்பட்டு 569 பேர் உயிர் இழந்து 42,871 பேர் குணம் அடைந்து தற்போது 1,009 பேர் சிகிச்சையில் உள்ளனர்.