டேராடூன் :
உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் மாவட்ட நீதிபதியாக இருப்பவர் பிரஷாந்த் ஜோஷி.
முசோரியில் உள்ள முகாம் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணைக்காக இரண்டு நாட்கள் அவர் விலை உயர்ந்த ‘ஆடி’ சொகுசு காரில் சென்று வந்துள்ளார்.
‘மாவட்ட நீதிபதி’ என்று அந்த காரில் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. அலுவலக பணிக்காக நீதிபதி பிரசாந்துக்கு தனி கார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், சொகுசு காரை அவர் பயன் படுத்தியது குறித்து சர்ச்சை உருவானது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
அந்த ‘ஆடி’ கார் பல்வேறு போர்ஜரி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேவல் கிருஷ்ணா என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது.
இந்த விவரம் அறிந்து அதிர்ச்சி அடைந்த உத்தரகாண்ட் உயர்நீதி மன்ற தற்காலிக நீதிபதி ரவி மாலி மாத், அரசு விதிகளுக்கு எதிராக செயல்பட்ட நீதிபதி பிரசாந்தை ‘சஸ்பெண்டு’ செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
குற்றவாளியின் சொகுசு காரில் நீதிபதி பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– பா. பாரதி