வரும் ஜனவரி 1 புத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும், 6 முக்கிய மாற்றங்கள் என்ன தெரியுமா?

Must read

டில்லி

புத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும் 6 முக்கிய மாற்றங்கள் குறித்து இங்குக் காண்போம்

வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் கீழ்க்கண்ட மாறுதல்கள் நடைமுறைக்கு வருகின்றன.

  1.  அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் ஃபாஸ்டாக் அவசியம்  : ஃபாஸ்டாக் என்பது சுங்கக் கட்டணங்களை முன் கூட்டியே செலுத்தி அதன் பிறகு சுங்கச்சாவடிகளில் கட்டணங்களைக் கழித்துக் கொள்ளும் முறையாகும்,   இந்த ஃபாஸ்டாக் லேபில்கள் வாகனத்தில் முன் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கும்.  அவற்றை ரேடியோ ஃப்ரீக்வென்சி மூலம் ஆய்ந்து கட்டணங்கள் கழித்துக் கொள்ளப்படும். வரும் ஜனவரி 1 முதல் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கு ஃபாஸ்டாக் அவசியம் என அறிவித்துள்ளது.
  2. அதிக மதிப்புள்ள காசோலைகளுக்கு பணப்பட்டுவாடா முறை மாறுதல் : ஜனவரி 1 முதல் அதிக மதிப்புள்ள காசோலைகளுக்குப் பணப் பட்டுவாடா செய்ய புதிய முறையை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.  அதன்படி இந்த காசோலையின் முக்கிய விவரங்கள் மீண்டும் உறுதி செய்யப்பட உள்ளன. இந்த முறையின்படி இந்த காசோலைகள் அளித்தோர் மின்னணு அடிப்படையில் எஸ் எம் எஸ், மொபைல் செயலி, இண்டர்னெட், ஏடிஎம் மூலம் பணம் பெறுவோர், தேதி, அளிப்போர், மற்றும் தொகை ஆகியவற்றைக் குறித்து விவரங்கள் அளிக்கலாம்.  இதில் ஏதும் மாறுதல் இருந்தால் பணப் பட்டுவாடா நிறுத்தி வைக்கப்படும்.  இந்த முறை ரூ.50000 மற்றும் அதற்கு அதிகமான தொகையுடைய காசோலைகளுக்குப் பொருந்தும். வங்கிக் கணக்கு வைத்திருப்போர் விரும்பினால் இந்த வரம்பு ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு மேல் உள்ள காசோலைகளுக்கு மாற்றப்படும்,.
  3. தொடர்பற்ற கார்டு பரிவர்த்தனை வரம்பு அதிகரிப்பு : ஜனவரி 1 முதல் தொடர்பற்ற கார்ட் பரிவர்த்தனை வரம்பை ரிசர்வ் வங்கி ரூ.2000லிருந்து ரூ. 5000 ஆக உயர்த்தி உள்ளது.  இந்த வசதியைப் பயனாளிகள் விரும்பினால் பயன்படுத்தலாம்.  இதே உயர்வு அடிக்கடி கார்டுகளின் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும்.
  4. வாட்ஸ்அப் சேவை சில போன்களில் நிறுத்தம் : ஜனவரி 1 முதல் வாட்ஸ் அப் சேவைகள் ஆண்டிராய்ட் ஓ எஸ் 4.0.3 மற்றும் அதற்கு பிந்தையவற்றில் மட்டுமே இனி இயங்கும் என அறிவித்துள்ளது.   இதைப்போல் ஐ ஒ எச் 9 மற்றும் அதற்கு பிந்தையவற்றில் மட்டுமே இயங்க உள்ளது.
  5. இரண்டு மற்றும் 4 சக்கர வாகனங்கள் விலை ஏற்றம் : வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் விலைப்பட்டியலில் ஜனவரி 1 முதல் மாற்றம் செய்துள்ளனர்.  எனவே 2 மற்றும் 4 சக்கர வாகனங்களின் விலையில் உயர்வு ஏற்பட உள்ளது.
  6. லேண்ட் லைனில் இருந்து மொபலை அழைக்க 0 வை சேர்க்க வேண்டும் : தொலைத் தொடர்புத் துறை அறிவிப்பின் படி வரும் ஜனவரி  15 முதல் லேண்ட் லைனில் இருந்து மொபைலை அழைக்க 0 வை சேர்க்க வேண்டும்.  அதாவது ஒரு மொபைல் எண் 94444 44444 என இருந்தால் அதை அழைக்க 0 94444 44444 என அழுத்த வேண்டும்.

More articles

Latest article