புதுடெல்லி: மருத்துவத் துறையில் மனிதவளத்தைப் பெருக்கும் நோக்கில், மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றும் திட்டத்தின்கீழ், மூன்றாவது கட்டமாக 75 மாவட்ட மருத்துவமனைகள் மத்திய சுகாதார அமைச்சகத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்துவதன் மூலம், மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் திட்டத்தின்கீழ் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 58 மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 24 மருத்துவமனைகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.
தற்போது மூன்றாவது கட்டமாக 75 மருத்துவமனைகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஒப்புதலைப் பெறுவதற்கான செயல்திட்டம், செலவின நிதி கமிட்டியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.