பெய்ஜிங்:

தேசிய கீதத்தை அவமதிப்போருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் சட்டத்தை சீனா நிறைவேற்றியுள்ளது.

அந்நாட்டு நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த குற்றவியல் சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் தேசிய கீதத்தை அவமதிப்பது தீவிரமான குற்றமாகும். இதற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை உள்பட அரசியல் உரிமைகள் பறிப்பு போன்ற அம்சங்களும் என்று அச்சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருமண நிகழ்ச்சிகள், பார்ட்டி, இறுதி சடங்கு போன்ற இடங்களில் தேசிய கீதம் பாட அந்நாடு தடை விதித்துள்ளது. எந்தந்த இடங்களில் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற விதிமுறைகளையும் வகுத்துள்ளது.

கடந்த செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட தேசிய கீதம் சட்டத்தில் அவமதிக்கும் குடிமகன்களுக்கு 15 நாட்களுக்கு குறைவான சிறைத் தண்டனை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தீவிர அவமதிப்புகளுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் தற்போது பகுதி சுயாட்சி கொண்ட மாகாணங்களுக்கும் பொருந்தும். தேசிய கீதம் ஒலிப்பதை கேட்டால் பாதசாரிகள் நடப்பதை நிறுத்த வேண்டும் என்று ஹாங்காங் சேதிய மக்கள் காங்கிரஸ் துணைத் தலைவர் குவாக் கிம் தெரிவித்துள்ளார்.

‘‘இது போன்ற சம்பவம் பாங்காங்கில் நடந்துள்ளது. பாதசாரிகள் நடை மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த மக்கள் தேசிய கீதம் ஒலிபரப்பும் சத்தம் கேட்டு ஆங்காங்கே அப்படியே நின்றார்கள். இதை பார்த்து நானும் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது’’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.