டில்லி

காசி மற்றும் மதுராவில் உள்ள சர்ச்சைக்குரிய நிலங்களை தேசியமயமாக்க வேண்டும் என சுப்ரமணியன் சாமி கூறி உள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்து இருந்த பிரச்சினையைப் போல் காசியில் உள்ள ஞானவாபி மற்றும் மதுரா நகரில் உள்ள கிருஷ்ண ஜன்மஸ்தானம் ஆகிய இடங்களிலும் நிலப்பிரச்சினை உள்ள்து. அயோத்தி வழக்கை தொடர்ந்து மதுரா மற்றும் காசியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலங்கள் குறித்து இந்து அமைப்புகள் வழக்கு தொடரலாம் என எதிர்பார்ப்பு இருந்தது.   ஆனால் இந்து அமைப்புக்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை.

டில்லியில் நடந்த ஒரு நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த பாஜக தலைவருமான சுப்ரமணியன் சாமி, “தற்போதுள்ள நிலையில் நாட்டில் எவ்வித  மதச் சர்ச்சையையும் உண்டாக்க விரும்பவில்லை.  ஆனால் அயோத்திக்குப் பிறகு  காசி மற்றும் மதுராவில் உள்ள சர்ச்சைகுரிய நிலங்களைக் குறித்து சிந்திக்கவெண்டிய நிலையில் உள்ளோம்.  இந்த இரு இடங்களில் எவ்வித வழக்கும் நடக்கவில்லை.  எனவே இவை நீதிமன்ற் நடவ்டிக்கைகளின் கீழ் வரவில்லை.

எனவே அரசு இந்த இரு நிலப்பகுதிகளையும் தேசியமயமாக்க வேண்டும்.   மசூடி என்பது தொழுகை நடத்தும் இடமாகும்.  தொழுகையை எங்கும் நடத்த முடியும்.  எனக்கு 14 ஜோதிர்லிங்கங்கள் மீது நம்பிக்க உள்ளது.  அவற்றில் காசியும் ஒன்றாகும்.   எனவே மக்களின் நம்பிக்கையையொட்டி விதி எண் 300  ஏ வின்படி இந்த நில்ங்களை தேசியமயமாக்க வேண்டும்.

நான் நீண்ட காலமாக அரசுக்கு இந்த கோரிக்கையை விடுவித்து வருகிறேன்.   தேசிய நலனுக்காக விதி எண் 300 ஏ பயனபடுத்தலாம்.  முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் விதி எண் 300 ஏ மூலம் அயோத்தி ராமர் கோவில் பகுடியில் 67 ஏக்கர் நிலத்தை தேசியமயமாக்கி உள்ளார்.   நான் அயோத்தி வழக்கில் விச்வ இந்து பரிஷத் அமைப்புக்கு உதவினேன்.  காசி மற்றும் மதுரா விவகாரத்தில் அவர்கள் எனக்கு உதவ வேண்டும்” என உரையாற்றி உள்ளார்.