லிஃபோர்னியா

டிஸ்னிலாண்ட்டில் முதலையால் கொல்லப்பட்ட சிறுவனுக்கு ஒரு நினைவுத்தூண் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

டிஸ்னிலாண்ட் உலகின் மிகவும் புகழ்பெற்ற ஒரு தீம்பார்க்.  கலிஃபோர்னியாவில் உள்ள ஃப்ளோரிடா தீவில் உள்ளது.  இந்த தீம் பார்க்கை கண்டுகளிக்க உலகெங்கும் இருந்து பலர் குடும்பத்துடன் வருவதுண்டு.  அது போல 2016ஆம் வருடம், லேன் தாமஸ் கிரேவ்ஸ் என்னும் இரண்டு வயதுச் சிறுவனை, அவனுடைய பெற்றோர்கள் அழைத்து வந்தனர்.  உடன் அவனுடைய அக்காவும் வந்திருந்தாள்.

குழந்தைகள் விளையாட கடற்கரைக்குச் சென்றனர்.  அங்கு இருவரும் மணல் வீடு கட்டி விளையாடினார்கள்.  அந்த வீட்டிற்கு தண்ணீர் தெளிக்க தண்ணீர் எடுக்க கடலில் அந்த சிறுவன் இறங்கினார்.  அப்போது திடீரென கடலில் இருந்து வந்த முதலை அந்த சிறுவனின் காலை பிடித்து இழுத்தது.  அந்த சிறுவனுக்கு முழங்காள் அளவுக்கே அங்கு நீர் இருந்தது.  மேலும் அந்த சிறுவன் அந்த முதலையை பார்க்ககூட இல்லை.  அந்த முதலையின் வாயில் இருந்து சிறுவனை மீட்க அவருடைய தந்தையும் கடலில் பாய்ந்து இழுத்தார்.  முதலை அதற்குள் அந்த சிறுவனை இரண்டு துண்டாக்கி விட்டு கடலுக்குள் மறைந்து விட்டது.

இந்த சிறுவனின் மறைவுக்குப் பின் எச்சரிக்கை போர்ட் வைக்காத டிஸ்னிலேண்ட் நிர்வாகத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.  அதன்பின் எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டன.  சிறுவனின் பெற்றோர் இதற்காக டிஸ்னிலெண்ட் நிர்வாகத்தின் மேல் வழக்கு தொடர விரும்பவில்லை என்றும் இனி தங்களின் குடும்ப நலனே முக்கியம் என கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

மறைந்த சிறுவனின் நினைவாக லேன் தாமஸ் ஃபவுண்டேஷன் என்னும் தொண்டு அமைப்பு தொடங்கப் பட்டுள்ளது.  டிஸ்னிலாண்ட் அந்த சிறுவனின் நினைவாக கலங்கரை விளக்கம் வடிவில் ஒரு நினைவுத்தூண் ஒன்று அமைத்து அஞ்சலி செலுத்தியது.  இங்கு வரும் மக்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருப்பதற்காகவே இந்த நினைவுத்தூணை கலங்கரை விளக்கம் வடிவில் அமைத்ததாக தெரிவித்துள்ளது.