இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படப் படப்பிடிப்பு நகரமாக ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி.

இந்தியாவில் தயாராகும் திரைப்படங்களில் பெரும்பாலானவற்றின் படப்பிடிப்பில் ஒரு பங்காவது ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடைபெறாமல் இருக்காது.

இந்நிலையில் தற்போது இந்தத் திரைப்பட நகரத்தை ஒட்டுமொத்தமாக 3 வருடங்களுக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் வாடகைக்கு எடுத்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

ஸ்டார் குழுமத்தை டிஸ்னி நிறுவனம் கடந்த ஆண்டு மொத்தமாக வாங்கியது. இதனால் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஓடிடி தயாரிப்பு நிறுவனமாக ஹாட்ஸ்டார் மாறியது எனபது குறிப்பிடத்தக்கது.

இங்கு ஒரே நேரத்தில் 40 திரைப்படப் படப்பிடிப்புகளை நடத்தலாம். எனவே டிஸ்னி ஹாட்ஸ்டார் தரப்பு ஃபிலிம் சிட்டியை மொத்தமாக வாடகைக்கு எடுத்துள்ளது என்று வரும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று ஸ்டுடியோ தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]