சமூகவலைதளத்தில் முக்கியப் பிரச்சனைகள் குறித்து பூரி ஜெகன்நாத் பேசுவதுண்டு.
பூரி ஜெகன்நாத் தெலுங்கின் முக்கிய இயக்குனர். இந்திப் படங்களும் இயக்குவார்.
தற்போது அன்னை தெரசா படத்துக்கு டிஸ் லைக் விழுந்த விவகாரம் இயக்குநர் பூரி ஜெகநாத்தை கோபமடைய செய்திருக்கிறது.
“நாளுக்குநாள் சமூகவலைதளத்தில் தங்களுக்குப் பிடிக்காதவர்களை ட்ரோல் செய்வதும், அவதூறு பரப்புவதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்ட அன்னை தெரசாவின் புகைப்படத்திற்கு ஆயிரம் லைக்குகளே கிடைத்தன. அதிர்ச்சிதரும் விதமாக அந்த புகைப்படத்தை பத்தாயிரம் பேர் டிஸ்லைக் செய்திருந்தனர். யார் இவர்கள்? என்ன மாதிரியான மனநிலை கொண்டவர்கள்? அன்னை தெரசாவின் அருகில் நிற்பதற்கு தகுதியில்லாத இவர்கள், டிஸ்லைக் செய்வதன் மூலம் எதை வெளிப்படுத்த விரும்புகிறார்கள்?” என காட்டமாக கேட்டுள்ளார்.
இந்த வெறுப்புப் பேச்சுகளுக்கு தீர்வாக அவர், ஒவ்வொருவரின் சமூகவலைதள கணக்கையும் அவரவர் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.