மதுரை,
மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன். அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களை சசிகலா தரப்பு, சென்னை கூவத்தூர் ரிசார்ட்ஸில் அடைத்து வைத்தபோது, இவரையும் அடைத்து வைத்தது.
அங்கிருந்து தப்பி வந்த இவர் ஓ.பி.எஸ். முகாமில் இணைந்தார். கூவத்தூர் முகாமில் இருந்து தான் மாறுவேடத்தில் தப்பி வந்ததாகவும் மீடியாக்களிடம் தெரிவித்தார்.
தற்போது அவர் மீண்டும் எடப்பாடி. அணியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
மதுரை முன்னாள் மேயரும் எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பா முன்னிலையில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்துள்ளார்.