டெல்லி
உலகெங்கும் பரவி வரும் குரங்கு அம்மை காரணமாக இந்திய விமானநிலையங்களில் நோய் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், சா்வதேச பொது சுகாதார அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு கடந்த 14-ஆம் தேதி அறிவித்தது.
எனவே மத்திய அரசு இந்தியாவிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நேற்று பிரதமரின் முதன்மை செயலாளர் ஆர்.கே.மிஸ்ரா சுகாதாரத்துறை உயரதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது குரங்கு அம்மை பரவாமல் தடுக்க விமான நிலையங்கள், துறைமுகங்களில் கண்காணிக்கவும், அண்டை நாடுகளான வங்கதேசம்,பாகிஸ்தான் ஆகிய எல்லை பகுதிகளில் நோய் பரவலை தடுத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடந்துள்ளது.
அதன்படி குரங்கு அம்மை அச்சுறுத்தல் காரணமாக தற்போது இந்திய விமான நிலையங்களில் நோய் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது.