சென்னை: அரசியல் கட்சித் தொடங்கப்போவதாக  அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று 2வது நாளாக ஆலோசனையை தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில், பிரபல தொழிலதிபரான நல்லிகுப்புசாமி இன்று  நடிகர் ரஜினிகாந்த்தைநேரில் சந்தித்தார். இரு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியலுக்கு வரப்போவதாக பல ஆண்டுகளாக கூறி வந்த  நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்க இருப்பதாக கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி நியமிக்கப்பட்டார். அதேபோல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நிமியத்தார்.

தொடர்ந்து கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும்  துரிதப்படுத்தியுள்ளார். கட்சியின் பெயர் மற்றும் சின்னம், கொள்கைகள் குறித்து ஆலோசித்து வரும் நிலையில், கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்றுமுதல் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தி உள்பட முக்கிய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இன்று 2வது நாளாகவும் ஆலோசனை தொடர்கிறது.

இந்த நிலையில், இன்று காலை, சென்னை போயஸ் கார்டனில் உள்ள  ரஜினி இல்லத்தில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி அவரை சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமான சந்திப்பா? அல்லது வேறேதும் காரணங்களுக்காக இந்த சந்திப்பு நடக்கிறதா? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.