தயாரிப்பாளர்களுடன் இயக்குநர்கள் மோதல்.
சில நிபந்தனைகளுடன் , இந்தி சினிமா. உலகம் படப்பிடிப்பைத் தொடங்க மகாராஷ்டிர மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் மகிழ்ச்சியில், இயக்குநர்கள் ஆழ்ந்திருந்த வேளையில் , இந்தியத் தயாரிப்பாளர்கள் கில்ட், 37 பக்கங்கள் அடங்கிய விதிமுறைகளை அச்சடித்து அளித்துள்ளது.
‘’ முத்தக்காட்சி கூடாது, படுக்கை அறை காட்சியை எடுக்கக்கூடாது’’ என்பன உள்ளிட்ட விதிகள் அதில் அடக்கம்.
இதற்கு இயக்குநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
‘’ இதெல்லாம் சாத்தியம் இல்லை. முத்தக்காட்சியைப் படமாக்கும் போது, பழைய காலம் போல் இரு பூக்கள் ஒன்றை ஒன்று உரசிக்கொள்வது போல் இப்போது படமாக்க முடியாது’’ என்கிறார், இயக்குநர், கவுரவ் பஞ்வானி.கொரோனா இல்லை என்று சான்றிதழ் அளிக்கப்பட்ட நடிகரும், நடிகையும் முத்தக்காட்சியில் நடிப்பது தவறு இல்லை’’ என்பது இயக்குநர் சஞ்சய் குப்தா கருத்து.
’’ தயாரிப்பாளர்கள் வகுத்துள்ள விதிகளை பின் பற்றினால் ஒரு நல்ல டைரக்டர் சினிமா எடுக்கவே முடியாது’’ என்று சொல்கிறார், ராம்கோபால் வர்மா.
‘’ உங்கள் விதிகளுக்காக எங்கள் ‘ஸ்கிரிப்டை’’ மாற்ற முடியாது’ நிலைமை முழுமையாக சீரடையும் வரை நாங்கள் காத்திருக்கத் தயார்.’’ என்கிறார்கள் வேறு சில இயக்குநர்கள்.
இந்த மோதல் எப்படி முடியப்போகிறது என்பது தெரியவில்லை.