சென்னை
நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் மாஸ்டர் படம் வெளியீடு தள்ளிப்போவது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தள்ளிப் போனது.
கொரோனா தொற்று ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என ஊகம் எழுந்தது. அதை மறுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படம் நிச்சயம் திரை அரங்குகளில் வெளியாகும் என உறுதி அளித்தார்.
ஆனால் இதுவரை இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இது குறித்து செய்தியாளர்கள் லோகேஷ் கனகராஜிடம் கேள்விகள் எழுப்பி உள்ளனர்.
அப்போது அவர், “திரைப்படம் ஒன்றைத் தயாரித்து விட்டு வெளியிடாமல் இருப்பது நெருடலாக உள்ளது. படம் வெளியிடும் தேதியை முடிவு செய்யாமல் டீசர் அல்லது டிரைலரை வெளியிடுவது சரி அல்ல. நவம்பர் 10 முதல் திரையரங்குகள் இயங்க உள்ளதால் விரைவில் நல்லவை நடக்கும்” என தெரிவித்துள்ளார்.