சென்னை
இயக்குநர் ஷங்கர் தனது இந்தியன் 3 திரைப்படம் முதலில் திரையரங்குகளில் தான் வெளியாகும் என அறிவித்துள்ளார்.
சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. ‘
இந்நிலையின் இந்தியன் 3’ படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓ.டி.டியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இயக்குனர் ஷங்கர் ‘இந்தியன் 3’ படத்தில் ஏற்கனவே படம்பிடிக்கப்பட்ட காட்சிகளில், ஒரு சில மாற்றத்தை செய்ய திட்டமிட்டுள்தால் நடிகர் கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக்வும் ஒரு சில நாள்களில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இயக்குநர் ஷங்கர் ஒரு நேர்காணலில் பங்கேற்ற போது,
“இந்தியன் – 2 படத்திற்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனங்கள் அதிர்ச்சியளித்தன. அதைக் கருத்தில்கொண்டு ‘இந்தியன் 3’ படத்தை சரி செய்வேன். மூன்றாவது பாகம் திரையரங்குகளில்தான் வெளியாகும்”
எனத் தெரிவித்துள்ளார்.