அமராவதி என்ற படத்தில் அஜித்தை அறிமுகம் செய்த இயக்குநர் செல்வாவின் மகனுக்குத் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. திருமணம் பற்றிய தகவல் சில வாரங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இரு தினங்களுக்கு முன் ராஜீவ் கர்ணா – மீரா திருமணம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. கொரோனா பிரச்சனை காரணமாக மிக எளிமையாகத் தான் அந்த திருமணம் நடைபெற்று இருக்கிறது.
இசையமைப்பாளர் டி. இமான் மட்டும் நேரடியாக சென்று மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். இதன் புகைப்படம் வெளிவந்திருக்கிறது.