
கொரோனா 2-வது அலை இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் திரைபிரபலங்கள் பலர் கொரோனாவால் சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் ரத்ன குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், 15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதில், அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தேரினர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு என்றுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரத்ன குமார்.
[youtube-feed feed=1]15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் Hospitalize செய்யப்பட்டு தேரினர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு🙏 🙏
— Rathna kumar (@MrRathna) May 29, 2021