தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அடுத்ததாக தான் தயாரிக்கும் படத்தின் அறிவிப்பை இன்று (03.08.2021) வெளியிட்டுள்ளார்.

இந்தப் புதிய படத்தை இயக்குநர் ராம் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் ‘பிரேமம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்ட நடிகர் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கிறார்.

அஞ்சலி கதாநாயகியாக நடிக்க, நகைச்சுவை நடிகர் சூரி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வி ஹவுஸ் நிறுவனம், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் ‘மாநாடு’ படத்தைப் பிரம்மாண்டமாக தயாரித்துவருகிறது.