
கடந்த 2015-ம் ஆண்டு இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த படம் ‘இன்று நேற்று நாளை’.
முதல் படமே அறிவியல் புனைவு படமாக எடுத்து அதில் வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குநர் ரவிக்குமார் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் ரவிக்குமாரின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமாகியுள்ளார். அவரது மறைவு குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரவிக்குமாரின் தாயார் மரணத்தை அவரது நண்பரும் இயக்குநருமான கௌரவ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]என் நண்பர் & இயக்குனர் ரவிக்குமார் அவர்களின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்.. என் ஆழ்ந்த இரங்கல்கள்.
RIP pic.twitter.com/Nz2CSPXxo8— Gaurav narayanan (@gauravnarayanan) March 21, 2021