அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் படம் அக்னிச் சிறகுகள். இதில், அக்‌ஷரா ஹாசன், இந்தி நடிகை ரைமா சென், சென்ராயன், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, நாசர், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நடராஜன் சங்கரன் இசை அமைக்கிறார். பாட்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள், கஜகஸ்தான், ஐரோப்பிய நாடு , ஜெர்மனி , சுவிட்சர்லாந்து என நடந்தது .

இந்நிலையில் அக்னிச் சிறகுகள் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் இயக்குனர் நவீன். இதனால் இப்படத்தின் டீஸர் அல்லது ட்ரைலர் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பாக்கின்றனர் .

 

[youtube-feed feed=1]