‘துள்ளாத மனமும் துள்ளும்’ மூலம் மனதை நிஜமாகவே துள்ள வைத்த இயக்குநர் எழில். நகைச்சுவை படங்களில் கூடுதல் கவனம் செலுத்துவார்.
முதன் முறையாக அவர் திரில்லர் கதையை கையாண்டுள்ளார். எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் மர்மக்கதையை படமாக்கி முடித்துள்ளார், எழில்.
இந்த படத்தில் கவுதம் கார்த்திக், தனியார் நிறுவனத்தில் பணி புரியும் துப்பறிவாளராக நடித்துள்ளார்.

பார்த்திபன், காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இதன் ஷுட்டிங் அண்மையில் நிறைவு அடைந்துள்ளது.
படம் குறித்து எழில் சொல்கிறார்.
“பெரும்பாலும் காமெடி படங்களில் தான் கவனம் செலுத்தி வந்தேன். முதல் முறையாக கொலையும், கொலை சார்ந்த சம்பவங்களையும் படமாக்கி உள்ளேன். இது சவாலான வேலைதான், கவுதம் மற்றும் பார்த்திபன் ஆகிய இருவருக்குமே, இது மாறுபட்ட படமாக இருக்கும்” என்கிறார் எழில்.
ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டம்.
– பா. பாரதி
[youtube-feed feed=1]