சென்னை: தமிழகத்தை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று பிரபல இயக்குநர் பாரதிராஜா கூறி இருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறி இருப்பதாவது:
அசாமை ஒரு அசாமியர் ஆளுவதைப்போல் மராட்டியத்தை மராட்டியர் ஆள்வதுபோல், கர்நாடகாவை கர்நாடகக்காரர் ஆள்வது போல், கேரளாவை ஒரு கேரளக்காரர் ஆள்வது போல் தமிழகத்தை ஒரு தமிழர்தான் ஆள வேண்டும்.
தமிழகத்தை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது. வெள்ளைக்காரன் ஆள்வதை எப்படி ஏற்கமுடியாதோ அது போல் தமிழகத்தை ரஜினிகாந்த் ஆள்வதை ஏற்க முடியாது.
தான் தமிழன் தான் என ரஜினிகாந்த் சொன்னாலும். அவர் வாழ வந்தவர் என கூறினார்.
Patrikai.com official YouTube Channel