திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா ஐயராக மாற நினைப்பதால்தான், ஆங்கில நாளிதழ் ஒன்று அவருடைய சாதியை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதாக திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் சார்பில் சமீபத்தில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் திரைப்படஇசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. அதுகுறித்த செய்தி வெளியிட்ட ஆங்கில நாளிதழான நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ், “இளையராஜா தலித் என்பதற்காகவே பத்ம விபூஷண் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டார்” என்கிற தொணியில் செய்தி வெளியிட்டது.
அந்த செய்திக்குபல்வேறு தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து சாதி ரீதியாக குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டும் வருத்தம் தெரிவித்து அந்த ஆங்கில நாளிதழ்.
இந்நிலையில் இன்று தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாரதிராஜா, “இளையராஜா ஐயராக மாற நினைப்பதால்தான், ஆங்கில நாளிதழ் அவருடைய சாதியை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது” என்று குற்றம்சாட்டினார். மேலும், “மூலத்தை மறந்துவிட்டு புதிதாக வேடமிடுவது தவறு” என்றும் தெரிவித்தார்.