காட்மாண்டு
இந்தியா நோபா நாட்டுக்கு இடையே வாராந்திர பஸ் சேவை இன்று தொடங்கப்பட்டது. மக்கள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.
டில்லியில் இருந்து நேபாள நாட்டின் ரோப்லா மாவட்டத்துக்கு நேரடி பஸ் சேவை இன்று தொடங்கியது. ரோப்லா மாவட்டம் நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 280 கிலோ தூரத்தில் உள்ளது.
இந்த மாவட்டத்துக்கும், டில்லிக்கும் இடையே போக்குவரத்து வசதி செய்யும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து முதல்கட்டமாக வாராந்திர பஸ் சேவை இன்று தொடங்கியது.
ஒவ்வொரு வாரம் புதன்கிழமை அன்று நேபாளம் ரோப்லாவில் உள்ள லிவாங் நகரில் இருந்து புறப்பட்டு பியுத்தான், பாலுவாங், நேபாள்கஞ்ச் வழியாக டில்லி வந்தடையும்.
அதேபோல, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைதோறும் டில்லியில் இருந்து பஸ் புறப்பட்டு ரோப்லாவுக்கு செல்லும் இந்த வாராந்திர பஸ் சேவைக்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் உண்டு.