எச்.வினோத் இயக்கத்தில் தல அஜீத் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை . இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், அஜித் தற்போது பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சிக்கிம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 10 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டுள்ளார் அஜித்.

அஜித்தின் பைக் ரைடு குறித்து அவருடன் பைக் பயணத்தில் ஈடுபட்ட பைக் ரைடரான தினேஷ் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

“அஜித் அவர்கள், நம்ம தல, சென்னை – கோவை -சென்னை – ஹைதராபாத் – வாரனாசி – காங்டாக் – லக்னோ – அயோத்யா – ஹைதராபாத் – சென்னை என 10,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டார். என் வாழ்க்கையில் நான் சந்தித்ததிலேயே மிகவும் பணிவான நபர் அஜித் என பதிவிட்டிருந்தார் .

அஜித்துடன் சென்ற பயணத்தை யூடியூப்பில் பதிவேற்றும்படி ரசிகர் ஒருவர் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள ரைடர் தினேஷ், எனக்கு அஜித்சார் பற்றி தெரியும். அவர் பிரைவசியை விரும்புபவர்.

நாம் அவரை மதிக்கிறோம் என்றால் அவரது பிரைவசியையும் மதிக்க வேண்டும். நான் ஹெல்மெட்டில் பொருத்தும் கேமராவைக் கூட பொருத்தவில்லை. என்னுடைய செல்போனைக் கூட பயன்படுத்தவில்லை. சோஷியல் மீடியாக்களில் பரவும் புகைப்படமும் அவரின் அனுமதி பெற்று எடுத்ததுதான். அவர் ஒரே முறையில் 10ஆயிரம் கிமீ பயணம் செய்தார். அவரும் அவரது நண்பர்களும் 10ஆயிரத்துக்கும் அதிகமான கிமீ பயணம் செய்துள்ளனர். அவர் ஒரு வெறித்தனமாக பைக் ரைடர்” என தெரிவித்தார்.