பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி-20 போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்திய அணி.
கடைசி ஓவரில் 16 ரன்கள் அடித்தால் 160 ரன்கள் என்ற வெற்றி இலக்கை அடையமுடியும் என்ற நிலையில் முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியா அவுட் ஆனார்.
நம்பிக்கை நட்சத்திரமாக விராட் கோலி மறுமுனையில் இருந்த நிலையில் 2 பந்துகள் விளையாடி 1 ரன் மட்டுமே எடுத்து தினேஷ் கார்த்திக்-கும் வெளியேறிய நிலையில் கடைசி பந்துக்கு களம் கண்டார் அஷ்வின்.
ஒரு பந்தில் 2 ரன் எடுக்கவேண்டிய நிலையில் மொஹம்மத் நவாஸ் வீசிய பந்து ‘ஒய்ட்’ ஆனதால் ஒரு பந்தில் 1 ரன் என்ற இலக்கை அடைய அஷ்வின் உதவினார்.
😄 😄 😄 pic.twitter.com/1NYJXmt96p
— 𝕯𝖍𝖆𝖓𝖆𝖘𝖊𝖐𝖆𝖗𝖆𝖓 (@Dhanam_tweets) October 25, 2022
வின்னிங் ஷாட் அடித்த அஷ்வினை விட அந்தப்போட்டியில் அவுட்டாகாமல் 53 பந்துகளில் 82 ரன் எடுத்த விராட் கோலி இந்த போட்டியில் வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த த்ரில் வெற்றி இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அதே வேளையில், மறுநாள் அஷுவினிடம் இந்தியாவை வெற்றிபெற வைத்து என்னை காப்பாத்திட்டே என்று தினேஷ் கார்த்திக் கூறும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.