மும்பை:
தனது தவறுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என்று தினேஷ் கார்த்திக் பிசிசிஐக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் கரிபீயன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தின்போது டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியுடன் இருந்து ஆட்டத்தை ரசித்தார். இது பிரச்சினையை ஏற்படுத்தியது.
கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியை பெறாமல் அவர் அங்கு சென்றதாகவும், அவர் அணிந்திருந்த டிசர்ட்டும் பிரச்சினையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தினேஷ் மீது ஒப்பந்த விதிமுறையை மீறியதாக புகார் எழுந்தது. து தொடர்பாக விளக்கம் கேட்டு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியது.‘
இதுகுறித்து விளக்கம் அளித்து பிசிசிஐக்கு எழுதியுள்ள பதில் தினேஷ் கார்த்திக், ‘செப்டம்பர் 4ம் தேதி முதல் விளையாட்டின் போது, டிரஸ்ஸிங் ரூமில் இருந்து விளையாட்டைப் பார்க்க அவர் என்னை அழைத்திருந்தார், அவரது அழைப்பை ஏற்று நான் சென்றேன். அப்போது டி.கே.ஆர் ஜெர்சியையும் அணிந்திருந்தேன் என்று ஒத்துக்கொண்டவர், நான் டி.கே.ஆரில் எந்த ஆட்டத் திலும் பங்கேற்கவில்லை.’ ஆனால், இது தொடர்பாக ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே பி.சி.சி.ஐ யிடம் அனுமதி பெறாததற்காக எனது நிபந்தனையற்ற மன்னிப்பு கோர விரும்புகிறேன் என்று எழுதி உள்ளார்.
மேலும், ‘நான் டிரினிடாடிற்கு வருவது கொல்கத்தா நைட் ரைடர்ஸின் தலைமை பயிற்சியாள ரான பிரண்டன் மெக்கல்லம், டி.கே.ஆரின் தலைமை பயிற்சியாளராகவும் இருக்கிறார். அவரது அழைப்பின் பேரில்தான் அங்கு சென்றதாகவும், கே.கே.ஆர் அணியைப் பொறுத்தவரை அவருடன் சில கலந்துரையாடல்களுக்கு வருவது கே.கே.ஆரின் கேப்டனாக எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று உணர்ந்ததாகவும் கூறி உள்ளார்.
எதிர்காலத்தில் இந்திய வீரர்கள் வெளிநாட்டு லீக்குகளில் அனுமதியின்றி பார்க்கப்படும் இதுபோன்ற சூழ்நிலை எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதை ஐ.பி.எல் உரிமையாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். பி.சி.சி.ஐ.,”செயல்பாட்டாளர் விளக்கினார்.