திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நந்தினி பிளஸ் 2 தேர்வில் அனைத்து பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் 600/600 மதிப்பெண் பெறுவது இதுவே முதல்முறை.
வரலாற்றில் இடம்பிடித்துள்ள மாணவி நந்தினி தந்தை சரவணக்குமார் கூலித்தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.
தமது வரலாற்று சாதனை குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மாணவி நந்தினி : நான் ஒரு கூலித் தொழிலாளியின் மகள். கூலித் தொழிலாளி மகளாகிய என்னால் என்ன செய்துவிட முடியும் என கவலைப்படவில்லை.
எனக்கு கல்விதான், படிப்புதான் சொத்து என எனது தந்தை சரவணகுமார் மற்றும் தாயார் பானுபிரியா சொல்லி சொல்லி வளர்த்தனர். அதனையே நானும் இடைவிடாமல் கடைபிடித்தேன். அதனால்தான் இவ்வளவு மதிப்பெண்களை என்னால் பெற முடிந்துள்ளது.
நம்பிக்கையுடன் முயற்சித்தால் அனைத்தும் சாத்தியமாகும். எனக்கு ஆடிட்டராக வேண்டும் என்பது விருப்பம். அதற்கான மேல்படிப்புகளை படிக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 8.17 லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர் இதில் 94.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்றவர்கள் 7,55,451 (94.03%)
தேர்ச்சி பெற்ற மாணவியர்- 4,05,753 (96.38%)
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 3,49,697 (91.45%)
மூன்றாம் பாலினத்தவர் 1 (100%)
மாணவர்களை விட மாணவியர் 4.93% தேர்ச்சி அதிகம்
மாநிலத்தின் மொத்த மேல்நிலைப்பள்ளிகள் 7533
100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகள் 2767.
100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளிகள் 326
அரசு பள்ளிகள் 89.80%
அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.99%
தனியார் சுயநிதி பள்ளிகள் 99.08%
இருபாலர் பள்ளிகள் 94.39%
பெண்கள் பள்ளிகள் 96.04%
ஆண்கள் பள்ளிகள் 87.79%
பாட வாரியாக 100% மதிப்பெண் பெற்று சதமடித்த மாணவ மாணவிகள் விவரங்கள் :
தமிழ்- 2
ஆங்கிலம்- 15
இயற்பியல் 812
வேதியியல் 3909
உயிரியல் 1494
கணிதம் 690
தாவரவியல் 340
விலங்கியல் 154
கணிணி அறிவியல் 4618
வணிகவியல் 5678
கணக்கு பதிவியல் 6573
பொருளியல் 1760
கணிணி பயன்பாடுகள் 4051
வணிக கணிதம், புள்ளியியல் 1334