டில்லி
தினாநாத் பாத்ரா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆர் எஸ் எஸ் கல்விக்குழு, அரசின் பாடநூல்களில் உள்ள பல பாடங்களின் பகுதிகளை நீக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆர் எஸ் எஸ் அமைப்பு, நாட்டில் உள்ள பாடப்புத்தகங்களிலுள்ள தவறான தகவல்களைக் கண்டறிந்து அரசு மூலம் அவற்றை மாற்ற அல்லது நீக்க தினாநாத் பாத்ரா தலைமையில் ஒரு குழு அமைத்தது. அந்தக் குழு தனது அறிக்கையை தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளது.
அதில் ”ஆங்கில மற்றும் உருது வார்த்தகளை நீக்க வேண்டும், மிர்சா காலிப் கவிதை ஒன்றை நீக்க வேண்டும், ஓவியர் எம் எஃப் ஹுசைன் வாழ்க்கை வரலாற்றை நீக்க வேண்டும், பா ஜ க வை மதவாதக் கட்சி என சொல்லும் வார்த்தைகளை நீக்க வேண்டும், மன்மோகன் சிங் 1984 கலவரம் பற்றி குறிப்பிட்டுள்ள வார்த்தைகளை நீக்க வேண்டும், குஜராத் கலவர்த்தை பற்றி குறிப்பிட்டுள்ளவற்றில் சில வார்த்தைகளை மாற்ற வேண்டும்” என்பது போல பலவற்றை பரிந்துரை செய்துள்ளது
தனது ஐந்து பக்க அறிக்கையில், “தேவையற்ற மற்றும் ஆதாரமற்ற செய்திகளை மாணவர்களுக்கு அளிப்பதால், அவர்கள் மனதில் மத துவேஷம் உண்டாகிறது. இந்த பாடப்புத்தகங்களில் சிவாஜி, மகாராணா பிரதாப், விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரைப் பற்றிய முழுமையான தகவல்கள் இல்லை அது மட்டுமின்றி இந்து-இஸ்லாம் மதங்களின் ஒற்றுமையை குலைப்பது போல் பல செய்திகள் கூறப்பட்டுள்ளன..” என குறிப்பிட்டுள்ளது,
அது தவிர பாடப்புத்தகங்களையும் இணைத்து அந்த புத்தகங்களில் எந்த பக்கத்தில் எந்த வார்த்தையை நீக்க வேண்டும் என்பதும், எதை எப்படி மாற்ற வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போல ஒவ்வொரு அரசும், அவரவர் கட்சிக்கு ஏற்றபடி பாடத்திட்டங்களை மாற்றும் போது, அல்லது மாற்றச் சொல்லி பரிந்துரை செய்யும்போது மாணவர்களை சிறிதளவாவது மனத்தில் நினைப்பதுண்டா??
அப்படி நினைத்திருந்தால் எதற்கு மாற்றச் சொல்லப் போகிறார்கள்?