
’மொமென்டோ’, ’இன்செப்ஷன்’, ’ப்ரெஸ்டீஜ்’, ’இன்டெர்ஸ்டெல்லர்’, ’பேட்மேன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது படங்களுக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு.
இந்நிலையில் கிறிஸ்டோபர் நோலன் அடுத்த படம் இயக்க போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜான் டேவிட் வாஷிங்டன், எலிசபெத் டெபிக்கி, ராபர்ட் பேட்டின்சன் மற்றும் பிரபல பாலிவுட் நடிகை டிம்பிள் கபாடியா ஆகியோர் நடிக்கவுள்ள இப்படத்திற்கு ’டெனெட்’ என்ற தலைப்பிடப்பட்டுள்ளது. டிம்பிள் கபாடியா 80 ‘s கனவு கன்னி ஆவார்.
’டெனெட்’ படத்தில் நடிப்பது குறித்து டிம்பிள் கபாடியா தரப்பிலிருந்து இதுவரை எந்தவித அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]