தி டார்க் நைட், இன்செப்ஷன், இண்டெர்ஸ்டெல்லார் போன்ற ஹாலிவுட் படங்களின் மூலம் இந்திய ரசிகர்களுக்கும் பரிச்சயம் ஆன கிறிஸ்டோபர் நோலன் தற்போது சர்வதேச உளவு நிறுவனங்களைப் பற்றிய ஆக்ஷன் கதையாக ‘டெனெட்’ எனும் படத்தை இயக்கவுள்ளார் .
கிறிஸ்டோபர் நோலன் இயக்கவிருக்கும் இந்த புதிய படத்தில் டிம்பிள் கபாடியா முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராபர்ட் பேட்டர்ஸன், மைக்கேல் கேய்ன் போன்ற முன்னணி ஹாலிவுட் கலைஞர்கள் இந்தப் படத்தில் பணியாற்றவுள்ளனர்.
2020ஆம் ஆண்டு, ஜூலை 17 அன்று வெளியாகும் இந்தப் படம் ஐமேக்ஸ் திரையில் கண்டுகளிப்பதற்கு ஏற்றார் போல 70 எம்எம் படச்சுருளில் படமாக்கப்படவுள்ளது.