Thanx for the overwhelming response guys,.. loved every minute in sets and the entire process of making kaithi…will cherish this forever! Thank you once again prabu sir and karthi sir for the opportunity!..To answer all your txts and calls yes“ Dilli will be back”👍 pic.twitter.com/uZ6lWX24x3
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 26, 2019
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கைதி . இது இவ்வருட தீபாவளி ரிலீசாக வெளிவந்தது .
கைதி தமிழகத்தில் மட்டும் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது. அது மட்டுமின்றி சென்னையில் மட்டும் முதல் நாள் 40 லட்சம் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 300 தியேட்டர்களில் கைதி ரிலீசாகியுள்ளது. கைதி படம் ஒரே இரவில், நான்கு மணி நேரத்தில் நடப்பது போல் உருவாகியுள்ளது. கார்த்தி கேரியரில் கைதி படம் ஒரு மிக பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் மீதான ரசிகர்களின் ஆதரவை அடுத்து, ‘கைதி 2′ படத்தை எதிர்பார்க்கலாமா என்கிற கேள்விக்கு லோகேஷ் , டில்லி மீண்டும் வருவார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதன் முலம் கைதி 2 படம் உருவாகவுள்ளது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
மேலும் கைதி 2 படத்திற்காக லோகேஷ் தன்னிடம் 30 நாள் கால்ஷீட் கேட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.