
சவாரி, பாலூன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகராக பணியாற்றிய கார்த்திக் யோகி நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கியுள்ளார். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க, சினீஷ் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் யோகி பாபு, ஆனந்தராஜ், அனகா, ஷெரின், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, யூடியூப் பிரசாந்த் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்பட வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று (18.08.2021) மாலை 5 மணிக்கு ‘டிக்கிலோனா’ படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நடிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படம் செப்டம்பர் 10 ஆம் தேதி ZEE5Tamil ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#Dikkiloona game starts from 10th of September ⏲️
Premiering exclusively on @ZEE5Tamil 📺#DikkiloonaUpdate @thisisysr @karthikyogitw @kjr_studios @SoldiersFactory @sinish_s @iYogiBabu @AnaghaOfficial@KanchwalaShirin @sonymusicsouth @proyuvraaj @gobeatroute pic.twitter.com/DFHgwKTuFz— Santhanam (@iamsanthanam) August 18, 2021