மும்பை: 
நாளை முதல் ‘டிஜிட்டல்’ ரூபாய் சோதனை முயற்சியாக, சில்லறை பரிவர்த்தனைகளில் அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த மாதம் முதல் தேதியிலிருந்து, மொத்த விலை பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட டிஜிட்டல் ரூபாய், நாளை முதல் சில்லறை பரிவர்த்தனைகளிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஏற்கனவே, மொத்த விலை பிரிவில் அறிமுகம்செய்யப்பட்ட இந்த முயற்சி வெற்றிபெற்றுள்ளதை அடுத்து, அடுத்த கட்டமாக, சில்லறை பரிவர்த்தனை பிரிவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த சோதனை முயற்சி, எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட நான்கு வங்கிகளுடன் இணைந்து செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களின் கணக்குகளுக்கு இடையே, டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனைக்கான வெள்ளோட்டம் நடத்தப்படும்.
இது, வெற்றிபெறும் பட்சத்தில், மேலும் பல வங்கிகளில் டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனைகள் அறிமுகம் செய்யப்படும்.
டிஜிட்டல் ரூபாய் முதற்கட்டமாக மும்பை, புதுடில்லி, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.