டில்லி,
டுத்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் உள்ள டோல் பிளாசாவில் டிஜிட்டல் அட்டைதான் பயன்படுத்த வேண்டிய  சூழ்நிலை உருவாகி வருகிறது.
கடந்த 8ந்தேதி பணம் செல்லாது என்று மோடி அறிவித்த பிறகு, இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய்த் தடை யினால் பணப் பரிமாற்றம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணங்களை டிசம்பர் 2 வரை முழுமையாக ரத்து செய்து மத்திய அரசு அறிவித்து உள்ளது.
smart_card_technology
இதைத்தொடர்ந்து, மத்திய அரசு அனைத்து வாகன உரிமையாளர்களையும் இனி டிஜிட்டல் அடையாள அட்டை மூலம் டோல் கட்டணங்களைச் செலுத்த வலியுறுத்தி வருகிறது.
பொதுவாகக் கனரக வாகனங்கள், தினசரி பேருந்துகள் மட்டுமே டிஜிட்டல் அடையாள அட்டை(RFID) பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது கார் உட்பட அனைத்து வாகன உரிமையாளர்களும் டிஜிட்டல் அட்டை பயன்படுத்த வலியுறுத்தி வருகிறது.
இதனால் வாயிலாக அனைத்து பணமும் சரியான முறையில் கணக்குக் காட்டப்படும் என்பது மத்திய அரசின் திட்டம்.
இதற்கு தகுந்தாற்போல தொடர் டெக்னாலஜி தொழிலதிபரான பாவின் துராகியா. தனது ஜீடா நிறுவனத்தின் கீழ் ஜீடா சூப்பர் கார்டு என்னும் புதிய தளத்தை தொடங்கி உள்ளார்.
இந்த கார்டு மூலம்  மக்கள் எளிமையான மற்றும் பாதுகாப்பான பணப் பரிமாற்றம் செய்யும் சேவையை பெற முடியும் என்று அறிவித்துள்ளார்.
zeta-card
இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களும்,  வர்த்தகர்கள், வாடிக்கையாளர் இடையிலேயான பணப் பரிமாற்ற சேவை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், வரும் காலங்களில் மக்கள் உபயோகப்படுத்தி வரும் வங்கிகளின் டெபிட் கிரெடிட் கார்டுகள் போல தனியார் நிறுவனங்களின் கார்டுகளும் ஆதிக்கம் செலுத்தும் என்பதை மறுப்பதிற்கில்லை.