டில்லி

தேர்வுகளை எழுதத் துணை தேவைப்படும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதத் தேவை இல்லை என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஒத்தி  வைக்கப்பட்ட சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூலை 1 முதல் 15 வரை நடைபெற உள்ளன.  அத்துடன் வடகிழக்கு டில்லியில் நடந்த வன்முறை காரணமாக அங்கு மட்டும் 10 ஆம் வகுப்பு தேர்வுக்ள் நடக்கவில்லை.  அந்த தேர்வுகளும் ஜூலை மாதம் நடைபெற உள்ளன.

தற்போது சமூக இடைவெளியை முன்னிட்டு தேர்வு அரங்கினுள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு போதிய இடைவெளியுடன் அனுமதிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் பல மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு ஒரு துணை தேவைப்படுகிறது.  இது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சி பி எஸ் இ அதிகாரி ஒருவர், “சமூக இடைவெளியைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டியது உள்ளதால் தேர்வு எழுத இன்னொருவர் துணை தேவைப்படும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதத் தேவை இல்லை.   இந்த முடிவு  தனி மனித விலகல் அடிப்படையில் அறிவிக்கபட்டுள்ள்ளது.

இத்தகைய மாற்றுத் திறனாளி மாணவர்கள் அவரவர் பள்ளிகளில் இது குறித்து தகவல் அளிக்க வேண்டும்.  இந்த மாணவர்களுக்கு மாற்று மதிப்பீடு முறையை விரைவில் சி பி எஸ் இ அறிவிக்கும்.  அந்த அடிப்படையில் இவர்களுக்கு மதிப்பெண்கள் வழஙக்படும்” என அறிவித்துள்ளார்,