மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் நவாஸ் கனி எம்.பி.. பிரியாணி சாப்பிடவில்லை: ஆய்வுதான் செய்தோம் என நவாஸ்கனி எம்.பி. அறிக்கை வெளியிட்டு உள்ளார்.  இதையடுத்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அங்கு சென்று நேரடி ஆய்வு செய்ததுடன் நவாஸ் கனி எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஆகும். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மதுரைக்கு தென்மேற்கில் ஏறத்தாழ 8 கி. மீ தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.

திருப்பரங்குன்றம் மலையில் நவாஸ் கனி எம்.பி.. பிரியாணி சாப்பிடவில்லை: ஆய்வுதான் செய்தார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

7ம் ஆண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், அப்போதே, ஆடலன்அஞ்சொல் அணியிழையாளை யொருபாகம் பாடலன்மேய நன்னகர் போலும் பரங்குன்றே என திருப்பரங்குன்றம் குறித்து சிலாகித்து பாடியுள்ளார்.

அதுபோல 8ம்ஆம் நூற்றாண்டில்,  இவைகற் றுவல்ல அடியார்பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே என சுந்தரமூர்த்தி நாயனார் பாடி யுள்ளார்.

14ம் நூற்றாண்டிலும்,  செந்திலங் கண்டிக் கதிர்வேலா தென் பரங் குன்றிற் பெருமாளே என அருணகிரிநாதர்  பாடியுள்ளார்.

அப்பேற்பட்ட திருப்பரங்குன்றத்தை இன்று இஸ்லாமைச் சேர்ந்த சிலஅமைப்புகள், அந்த மலையின்மீது ஒரு தர்காவை அமைத்துக் கொண்டு, அது சிக்கந்தர் மலை என்றும், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்றும் பிரசசினை செய்து வருகின்றனர்.  இது தமிழக மக்களிடையே குறிப்பாக இந்து மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில், சில இஸ்லாமிய அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலைமீது ஆடு, கோழிகளை வெட்டி பிரியாணி விருந்து போடுவதாக அறிவித்து மக்களிடையே உள்ள ஒற்றுமையை குலைக்கும் வகையில், செயல்பட்டனர். இது மக்களிடைய பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து,  இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்து முன்னணியினரும் பேரணி நடத்தினர். இது தொடர்பாக இரு தரப்பிலும், 400 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது

இதற்கிடையில்  ராமநாதபுரம்  தொகுதி இஸ்லாமிய எம்.பி.யான, நவாஸ் கனி, ஆய்வு என்ற பெயரில் திருப்பரங்குன்றம் மலை மீது சென்றதுடன்,   தன் ஆதரவாளர்களுடன் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டதாக,  நாளிதழ் மற்றும் சமூக வலைதளங்களில்  படத்துடன் செய்தி வெளியானது.  இது பெரும் ச்ர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது,  திருச்சி மாவட்டம், மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமீது, வக்பு வாரிய தலைவரும், ராமநாதபுரம் எம்.பி.யுமான நவாஸ்கனி திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று, தர்கா பகுதியை ஆய்வு செய்தனர். நவாஸ்கனி எம்.பியுடன் மலைக்கு சென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மலைக்கு போகும் படிக்கட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது ஆதரவாளர்களுங்ன திருப்பரங்குன்றம் சென்றார். காலை 10.30 மணிக்கு மலைமேலுள்ள காசிவிசுவநாதர் கோயிலுக்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்றார். 5 இடங்களில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுத்து கோயிலை அடைந்தார். விசுவநாதர், விசாலாட்சி அம்மனை தரிசத்தார். இதன்பின், மலைக்கு பின் பகுதியில் நிலையூர் ரோட்டில் காசிவிசுவநாதர் கோயிலுக்கு செல்லும் வழியாக 12.30 மணிக்கு மலை அடிவார பகுதிக்கு திரும்பிய ஹெச்.ராஜா திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  “திருப்பரங்குன்றம் கந்தர்மலை தொடர்பான வழக்கு 100 ஆண்டு பழமையானது. இதுபற்றி பல்வேறு நீதிமன்றங்களில் தீர்ப்பு வந்துள்ளது. 1931-ல் லண்டனிலுள்ள பிரிவிக் கவுன்சில் மூலம் இம்மலை முழுவதும் அறுபடை வீடுகளில் முதல் படையான முருகனுக்கே சொந்தமானது என தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது

1994-ல் தலவிருச்சமான கல்லத்தி மரத்தில் இஸ்லாமியர்கள் பிறை கொடி கட்டினர். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. . ஆனால், இஸ்லாமியர்கள் கொஞ்சம், கொஞ்சமாக வந்து, தற்போது நாடாளுமன்ற உறுப்பினருடன் சென்றவர்கள் காசி விசுவநாதர் கோயிலுக்கு செல்லும் படிக்கட்டில் வைத்து பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.

இதன்மூலம் இந்துக்களுடன் அவர்கள் மோத திட்டமிடுகின்றனர் என்ற சந்தேகம் எழுகிறது. சிக்கந்தர் மலை எனக் கூறி திருப்பரங்குன்றம் கந்தர் மலைக்கு நவாஸ்கனி எம்.பி. மதவெறி நோக்குடன் வந்துள்ளார். அவர் மீது வழக்கு மட்டும் பதிந்தால் போதாது. அவரை கைது செய்ய வேண்டும். அவர்கள் பாதை அல்உம்மா அமைப்பில் இருக்கிறது. நவாஸ்கனி மற்றும் அவரது கட்சி சார்ந்தவர்கள் மீது எவ்விதத்திலும் பாரபட்சம் காட்டாமல் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

1931-ல் இருந்த நிலை தொடரவேண்டும் என்ற போதிலும், தற்போது மலை தர்கா வழிபாடு முறையில் மாற்றம் இல்லை. இடத்தை வரிவாக்கம் செய்துள்ளனர். ஆடு, கோழிகளை வெட்டுவோம் என கூறுவது உள்நாட்டுப் போருக்கு அறைகூவல் விடுகின்றனர்.

திமுக அரசு வந்த பிறகு இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளுக்கு துணிச்சல் வந்திருக்கிறது. ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையில்  நவாஸ் கனி பிரியாணி சாப்பிடவில்லை; ஆய்வு செய்யவே சென்றார் என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால்,  அவரது ஆதரவாளர்கள், படிக்கட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து ‘  நவாஸ் கனி  வெளியிட்டள்ள அறிக்கையில்,  மதுரை சிக்கந்தர் மலை தர்கா விவகாரம் தொடர்பாக, கடந்த 22ம் தேதி நேரில் கள ஆய்வு செய்தோம். மதுரை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து, ‘பிரச்னையின்றி கடந்த காலங்களில் எப்படி சுமூகமாக இருந்ததோ, அதேபோல் நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களும் சென்று வர, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, வலியுறுத்தினோம்.

இது தொடர்பாக கலெக்டரிடமும் பேசினோம். நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, அங்கு தர்கா, காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. தர்காவிற்கு அனைத்து மதத்தினரும் சென்று வருகின்றனர். எனவே தேவையற்ற அசவுகரியத்தை ஏற்படுத்தாமல், இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வலியுறுத்தினோம்.

இதுதொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் பேசிய போது, ‘உணவு கொண்டு செல்வதற்கு தடை இல்லை. ஆடு, கோழி எடுத்துச்செல்வதற்கு இருக்கும் தடை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம்’ என்றார். மேலும், ‘சமைத்த அசைவ உணவை எடுத்துச்செல்ல தடை இல்லை’ எனப் போலீசார் கூறியதை தொடர்ந்து, சமைத்த அசைவ உணவை எடுத்துச் சென்று, மக்கள் உண்டனர்.

விரைவில் அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு, கடந்த காலங்களில் இருந்தது போல், மக்கள் சிரமமின்றி தர்கா சென்றுவர, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

மதுரை மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கும் நன்றாக தெரியும். நுாற்றாண்டு பழமைமிக்க சிக்கந்தர் தர்கா, மலை மீது அமைந்துள்ளது; அங்கு ஆண்டாண்டு காலமாக, ஆடு கோழிகள் நேர்ச்சை செய்யப்பட்டு உணவு வழங்கப்படுகிறது. தற்போது ஏதோ புதிதாக, அசைவ உணவு கொண்டு சென்று உண்பதைப் போன்ற தோற்றத்தை, அரசியல் ஆதாயத்திற்காக சிலர் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

கடந்தஆண்டு வரை எந்த பிரச்னையும் இல்லாமல், அங்கு ஆடு, கோழிகள் நேர்ச்சை செய்யப்பட்டன. இது, நுாறாண்டுகளுக்கும் மேலாக தொடரும் நடைமுறை.அங்குள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு தனிப்பாதை உள்ளது; சிக்கந்தர் தர்காவிற்கு தனிப்பாதை உள்ளது.

முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து மத மக்களும் அங்கு நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக சென்று வந்து கொண்டிருக்கின்றனர். இத்தனை ஆண்டுகள், எந்த பிரச்னையும் வராத நிலையில், தற்போது இதை வைத்து அரசியல் ஆதாயம் காண வேண்டும் என்ற நோக்கத்தில், இதை அரசிய லாக்கி கொண்டிருக்கின்றனர்.

அரசிதழில் பிரசுரிக்கப்பட்ட அறிக்கையின்படி, தர்கா அமைந்துள்ள 50 சென்ட் நிலம், தமிழக வக்பு வாரியத்திற்கு உட்பட்டது. அந்த பகுதியில் தான் தர்கா அமைந்துள்ளது. ஆண்டாண்டு காலமாக நாம் கடைபிடிக்கும் நல்லிணக்கத்தை, தொடர்ந்து கடைப்பிடிப்போம்; பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

“நவாஸ் கனி எம்.பி-யின் பதவியை பறிக்க வேண்டும்”! மதுரை வழக்கறிஞர் குடியரசு தலைவர், பிரதமருக்கு கடிதம்