சென்னை: திமுக ஆட்சியில் பங்கு கேட்டீர்களா? என தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைமையிடம் பேசிய செல்வபெருந்தகையிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பதில் கூறாமல் எஸ்கேப் ஆனார். இதன் காரணமாக, திமுகவை மீண்டும் தோளில் சுமக்க தேசிய கட்சியான காங்கிரஸ் முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
திமுக கூட்டணி குழு அமைத்தவுடன் தொகுதி பங்கீடு குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் என செல்வப்பெருந்தகை கூறிவிட்டு சென்றார்.

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, நேற்று (டிசம்பர் 3ந்தேதி) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, எம்என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, ராஜேஷ் குமார் ஆகிய 5 பேர் அடங்கிய பேச்சுவார்த்தை குழுவினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு உள்பட பல்வேறு தகவல்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், முதல்வருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ”நாங்கள் மரியாதை நிமித்தமாகவே முதலமைச்சரை சந்தித்தோம் என்று கூறியதுடன், திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைத்தவுடன் தொகுதி பங்கீடு குறித்து இந்த குழு பேச்சுவார்த்தையை தொடங்கும் என கூறி நழுவினார்.
அப்போத செய்தியாளர்கள், கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு, தொகுதி பங்கீடு, அதிக தொகுதிகளை கேட்டீர்களான என ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.. ஆனால், அதற்கு நேரடியாக பதில் கூறாத செல்வபெருந்தகை, காங்கிரஸ் மேற்கே போகுமா? கிழக்கே போகுமா? என்று பல சந்தேகங்களை எழுப்புகிறீர்கள், ஆனால் இப்போது இண்டியா கூட்டணி மிக சிறப்பாக உறுதியாகி உள்ளது என்றார்.
தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. குறைவான தொகுதி கொடுத்தாலும் திமுக கூட்டணியில் தொடர்வீர்களா? என்று கேட்கிறீர்கள். இதில் என்ன உங்களுக்கு சந்தேகம்? கடந்த 4 தேர்தல்களில் உறுதியாக ஒன்றாக பயணித்துள்ளோம்” என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
”தமிழ்நாட்டில் திமுக தலைமையில் மீண்டும் அரசு அமைந்தால் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா? ” என்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளிப்பதை தவிவிர்த் செல்வப்பெருந்தகை, உடனே அங்கிருந்து எஸ்கேப்பானார்.
முன்னதாக, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என புதிதாக கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய் அறிவித்துள்ளது தமிழ்க அரசியல் கட்சிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆட்சியில் பங்கு தர மறுக்கும் திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள், கூட்டணி மாறுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தவெக தலைவர் விஜய் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் நடப்புடன் இருந்து வரும் நிலையில், காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டீர்களா என்ற கேள்விக்குபதில் அளிக்காமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.