சென்னை:

பேனரில் உள்ள கலர் உங்களை நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்ததா? என பேனர் காரணமாக உயிரிழந்த சுபஸ்ரீ தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட போலீஸ்இன்ஸ்பெக்டரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதிமுகவினரின் கட்அவுட் கலாச்சாரத்துக்கு இளம்பெண் சுபஸ்ரீ பலியான நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் சேஷசாயி மற்றும் சத்தியநாராயணனன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது தமிழகஅரசை கடுமையாக சாடிய நீதிபதிகள், இன்னும் எத்தனை பேரின் ரத்தம் சாலைகளில் தேங்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது என்று கடுமையாக கேள்வி விடுத்த நீதிபதிகள், உயிர்ப்பலி கொடுத்தால்தான் அரசு செயல்படுமா என்றும் கேள்வி விடுத்தனர்.

பின்னர் பிற்பகலில் நடைபெற்ற விசாரணையின்போது,  மாநகராட்சி சார்பில் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர், காவல்துறை தரப்பில் பள்ளிக்கரணை காவல் உதவி ஆணையர் சவுரிநாதன் ஆகியோர் ஆஜராகினர். மேலும், சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையாளர் ஆல்பி வர்கீசும் ஆஜரானார்.

அவர்களிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள்,  விதிமீறி பேனர் வைக்க அனுமதி அனுமதி அளித்த அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன…?

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய ஏன் தாமதம் ஏற்ப்டடது?

தமிழகத்தில் விவாகரத்துக்கு மட்டும்தான் பேனர் வைக்கவில்லை என்று தெரிவித்தவர், ஒரு நல்ல காரியம் நடக்கவேண்டும் என்றால் காவு கொடுப்பதை சிலர் நம்புகிறார்கள்.

அதுபோல உயிர்ப்பலி கொடுத்தால்தான் அரசு செயல்படுமா? என்றும் கேள்வி விடுத்தனர்.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளரிடம் பல்வேறு கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  காவல் குறிப்பேட்டில் பேனர் குறித்து எழுத மறந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.

‘அதாவது காவல்துறை குறிப்பேட்டில் பேனர் பற்றி ஒருவரிகூட இல்லை. ஏன் எழுதவில்லை என நீதிபதிகள் கேட்டனர். இதற்கு பதிலளித்த காவல் ஆய்வாளர், விபத்து நடந்த பகுதியில் 4 பேனர்கள் இருந்தன. குறிப்பேட்டில் எழுத மறந்து விட்டேன் எனத் தெரிவித்தார். மேலும்,  பிற்பகல் 2.30 மணிக்கு நடந்த விபத்து குறித்து மாலை 6 மணிக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து, அவரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 18 ஆண்டுகளாக காவல்துறையில் இருக்கும் ஆய்வாளர் ஒரு பதிவு செய்ய இவ்வளவு நேரம் எடுத்தது சரியா? என கேள்வி எழுப்பினர்.

மேலும் அனுமதி பெறாமல் பேனர் வைத்திருப்பது தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பேனரில் உள்ள கலர் உங்களை நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்ததா? எனவும் கேள்வி எழுப்பினர்.