சென்னை,
அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது என்னை சிகிச்சை அளிக்க அனுமதிக்கவில்லை என்று இருதய சிகிச்சை நிபுணர் சுவாமிநாதன் விசாரணை ஆணையத்தில் கூறியதாக தெரிவித்தார்.
ஜெ.மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது, அப்பல்லோவில் பணியாற்றி வரும் இருதய சிகிச்சை நிபுணர் சுவாமிநாதன் இன்று ஆஜர் ஆனார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் சுவாமிநாதன், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட சிகிச்சைகள் குறித்து விசாரணை ஆணையத்தில் விளக்கமளித்தாக கூறியுள்ளார். அவைகள் மருத்துவம் சார்ந்தவை என்றும், அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது நானும் அங்கிருந்தேன். ஆனால், என்னை சிகிச்சை அளிக்க அனுமதிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இன்று விசாணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஜெ. மருத்துவ சிகிச்சை குறித்து 2 சூட்கேஸ்களில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.