சென்னை :
மஹேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரம், சென்னை ரசிகர்களின் கிரிக்கெட் உலக சூப்பர் ஸ்டார் கடந்த வாரம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவித்தார்.
சென்னையில் பயிற்சி மேற்கொள்வதற்காக வந்தவர், வந்த இரு தினங்களில் தனது ஓய்வு குறித்து அறிவித்தது தோனி ஆர்மியாக விளங்கிய சென்னை ரசிகர்களிடம் பெரும் ஏமாற்றத்தைத் தந்ததுடன் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது, பி.சி.சி.ஐ-யின் செயலாளராக இருக்கும் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா-வுக்கும் தோனிக்கும் இடையிலான கருத்துவேறுபாடே தோனியின் இந்த திடீர் முடிவுக்குக் காரணம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னலாக இடம் பெற்ற தோனி, அப்போது ராணுவத்தில் சில நாள் பயிற்சி பெற்று, பாராடுரூப்பராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலகில் வேறு எந்த நாட்டிலும் எந்த ஒரு விளையாட்டு வீரரும் இதுவரை இதுபோல் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. அப்போது இது குறித்து கருத்து தெரிவித்திருந்த தோனி கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றபின் தான் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக கூறியிருந்தார்.
தற்போது, அவர் ஹெலிகாப்டரில் இருந்து அனாயசமாக கில்லி மாதிரி குதித்து பாராசூட்டை விரித்துப் பறக்கும் காட்சி சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாக வளம் வருகிறது.
வீடியோ இணைப்பு