மும்பை: 14வது ஐபிஎல் சீஸன் 2வது லீக் போட்டியில், டெல்லி அணிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை அணி. ஆனால், கேப்டன் தோனி டக்அவுட் ஆனார்.
டாஸ் தோற்று முதலில் களமிறங்கியது சென்னை அணி. அந்த அணியின் சுரேஷ் ரெய்னா 54 ரன்கள் அடித்து ரன்அவுட் ஆனார்.
மொயின் அலி 36 ரன்களை சாத்த, அம்பாதி ராயுடுவின் பங்களிப்பு 23 ரன்கள். ரவீந்திர ஜடேஜா 26 ரன்களை அடிக்க, கடைசி கட்டத்தில் ஆடவந்த சாம் கர்ரன், 15 பந்துகளில் 2 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகளுடன் 34 ரன்களை வெளுத்தார். அவர் கடைசிப் பந்தில் அவுட்டானார்.
முடிவில், 20 ஓவர்களில், 7 விக்கெட்டுகள் இழந்த சென்னை அணி, 188 ரன்களைக் குவித்து, சவாலான இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்தது.
இந்த சவாலான இலக்கை டெல்லி அணி எட்டுமா? சென்னையின் பிராவோ, ஷர்துல் தாகுர், தீபக் சஹார், ஜடேஜா, சார் கர்ரன் உள்ளிட்ட பெளலர்களை டெல்லியைக் கட்டுப்படுத்துவார்களா?