சென்னை:

டந்த சனிக்கிழமை (6ந்தேதி) அன்று சென்னையில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியின்போது, கடைசி 2 ஓவரில் பந்து வீசிய தீபக் சாஹர் மீது சிஎஸ்கே கேப்டன் தோனி கோபப்பட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில், தோனி கோபப்பட்டது குறித்து, கூறிய தீபக் சாஹர், போட்டி முடிந்ததும், தோனி தன்னை கட்டிப்பிடித்து பாராட்டினார் என்று கூறி உள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் அடையே கடந்த 6ந்தேதி போட்டி நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சென்னை அணி 22 ரனகள்  வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 39 ரனகள் தேவை என்ற நிலையில், சென்னை அணி சார்பில் 19-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். அவர் வீசிய பந்து,  முதல் இரண்டு பந்துகள் தொடர்ச்சியாக நோ பாலாக போனது.  ‘அதில் முதல் பந்தில் பவுண்டரியும் இரண்டாவது பந்தில் 2 ரன்களும் எடுக்கப்பட்டன.

இரண்டாவது நோ பாலை வீசியதும் கடும் கோபமடைந்த டோனி, தீபக் சாஹரை திட்டியதோடு ஆலோசனையும் வழங்கினார்.  பொதுவாக  இக்கட்டான நேரத்தில் பொறுமை காப்பவர் டோனி, ஆனால்  அன்றைய தினம் அவர் சாஹர் மீது கோபப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது.

தொடர்ந்து பந்து வீசிய  சாஹர் மீதமுள்ள ஆறு பந்துகளையும் சிறப்பாக வீசினார். முதலில் கொடுத்த 8 ரன்கள் தவிர்த்து, 5 ரன்கள் மட்டுமே கொடுத்து, 1 விக்கெட்டையும் எடுத்தார் . கடைசி ஓவரில் பஞ்சாப் 3 ரன்கள் மட்டுமே எடுக்க சென்னை 22 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

இந்த நிலையில், தோனி தன்னை எதற்காக திட்டினார், என்ன சொன்னார், என்ன செய்தார் என்பது குறித்து சாஹர் கூறியதாவது,

போட்டி முடிந்ததும் அனைத்து வீரர்களும் என்னிடம் வந்து, டெத் ஓவரை நன்றாக வீசியதாக பாராட்டினர். நான் தொடர்ந்து நோ பாலாக போட்டதால் என் மீது கோபப்பட்டு திட்டிய கேப்டன் தோனியும் என்னை பார்த்து சிரித்துக்கொண்டே வந்து  கட்டிப்பிடித்தார்.

இறுதியில் நன்றாக பந்துவீசியதாகவும் இந்த சீசன் முழுவதும் நன்றாக வீசுமாறும் கூறினார் என்று தீபக் சாஹர் சந்தோஷமாக தெரிவித்து உள்ளார்.