இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 206ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் இதுவரை நான்கு பேர் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதிலிருந்து இதுவரை 13,486 பேரிடம் 14,376 மாதிரிகள் பெறப்பட்டு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் கொரோனா வைரஸ் முதியவர்களையும், சிறு வயது குழந்தைகளையுமே அதிகமாக தாக்குகிறது.என கூறியுள்ளார் .

மேலும் உயிர்க்கொல்லி நோயாக உருவெடுத்திருக்கும் கொரோனாவிற்கு முறையான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய் தாக்குதலில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்வது அவசியமாகிறது.

நெல்லிக்காய், எலுமிச்சை, புரோக்கோலி, ஆரஞ்சு, திராட்சை, தக்காளி போன்றவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘வைட்டமின்-சி’ நிறைந்திருக்கிறது. இவற்றை அடிக்கடி உட்கொள்வதன் மூலம், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். சிலருக்கு இவை போதுமானதாக இருக்கும். ஆனால் ஒருசிலருக்கு ‘வைரஸ்’ தொற்றை எதிர்க்க கூடுதலான வைட்டமின்கள் தேவைப்படும்.

அதனால் ‘வைட்டமின்-சி’ சத்து நிறைந்த மருந்து-மாத்திரைகள், சாவன்பிராஷ் போன்ற லேகியங்களை டாக்டர்களிடம் ஆலோசித்து எடுத்துக்கொள்ளலாம். தமிழக அரசு ‘வைட்டமின்-சி’ மருந்து-மாத்திரைகளை, மக்களுக்கு இலவசமாக கொடுக்கலாம் என கூறியுள்ளார் .