மஹாராஷ்டிராவில், கோவில்களில் பெண்கள் நுழைய அனுமதி கோரி போராட்டங்கள் வெடிக்கக் காரணம், சனி கோவில் தான். இங்கு, பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறையை மீறி, செப்டம்பர் 2015ல், அடையாளம் தெரியாத பெண் ஒருவர், கோவிலுக்குள் நுழைந்தார். இதன் காரணமாக, கோவில் பாதுகாவலர்கள் ஏழு பேரை, ‘சஸ்பெண்ட்’ செய்தது, கோவில் நிர்வாகக் குழு. மேலும், கோவில் புனிதம் கெட்டுப் போய்விட்டதாக மொத்த கிராமமே ஒன்று சேர்ந்து பால் அபிஷேகம் செய்து சிறப்பு பிரார்த்தனை செய்து “தீட்டு” கழித்தனர்.
இது பெண்ணுரிமைப் போராளியும் பூமாதா பிரிகேட் நிறுவனருமான திருப்தி தேசாயை காயப் படுத்தியது. அவர் கோவில்களில் பெண்கள் நுழைய விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக, போராட்டங்களும், பிரசாரங்களும் முன்னெடுத்தார். இந்த போராட்டங்களை, ‘பூமாதா பிரிகேட்’ வழிநடத்தியது. இந்த அமைப்பைச் சேர்ந்த, 150 பெண்கள், சமீபத்தில், நாசிக்கில் உள்ள திரிம்பகேஷ்வரர் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அதன் பிறகு ‘கோவில்களுக்குள் செல்வது, பெண்களின் அடிப்படை உரிமை; அதை மாநில அரசு பாதுகாக்க வேண்டும்’ என, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இன்று அவர் அளித்த பேட்டியில், இன்று ஷனி சிங்னாப்பூர் .
ஏப்ரல் 13 அன்று கோலாப்பூரில் உள்ள மஹாலட்சுமி கோவில்.
மே மாதம் சபரிமலை கோவில் .
எங்கெல்லாம் பாலின வேற்றுமை கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றதோ அங்கெல்லாம் பெண்கள் போராட்டம் நடத்தி தங்களின் உரிமையை நிலைநாட்டுவார்கள். நாங்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கருவறைக்குள் நுழைய உரிமையை நிலைநாட்ட சட்டமியற்ற வலியுறுத்துவோம்” என்றார்.
தொடர்புடைய பதிவுகள்: