திருச்செந்தூர்

ன்று முதல் 3 நாட்களுக்குத் திருச்செந்தூர் கோவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டது.   கோவிலில் பக்தர்கள் இல்லாமல் வழக்கமான பூஜைகள் நடந்தன.  தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் நேற்று முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சாமி தரிசனத்துக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கி உள்ளனர்.   இதனால் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் பின்பற்ற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதைக் குறைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல தடை உள்ளது.  எனவே இதைக் காரணம் காட்டி திருச்செந்தூர் கோவிலில் இன்று முதல் 3 நாட்களுக்குப் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  தவிரக் கோவில் நாழிக் கிணற்றில் நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்குப் பக்தர்கள் போக முடியாமல் தடுப்புக்கள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பு நடத்தி வருகின்றனர்.